June 7, 2016
March 12, 2016
உறவில் விடும் விரிசல்கள்!
என்னுடைய
எதிர்பார்ப்புகள் என்னவோ
ரொம்ப சின்னதுதான்; அதை
உன்னிடம்
எதிர்பார்த்தது தான்
என் தவறு!
நம் இருவருக்குமே
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாக
இருப்பதுதான் நம்
பிரிவுக்கு காரணம்.
கோவம் கொள்வதால்
காதல் இல்லை என்று
அர்த்தம் ஆகிவிடுமா?
தங்களை புரிந்துகொள்ளவில்லை என்று
சொல்லும் நீங்கள் தான் ஒருபோதும்
எங்களை புரிந்துகொண்டதே இல்லை!
சில நேரங்களில்
உங்கள் உதாசினங்கள்
எங்களை காயப்படுத்திவிட்டு செல்லும்
அந்த வலியை கூட
உங்களிடம் சொன்னதில்லை;
தாயை மதிக்கும் நாங்கள்
தாரத்தையும் அப்படியே மதிக்கிறோம்
என்பதை கூட
புரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள்.
பொறுப்புகளில்
புதைந்து கொண்டிருக்கும் எங்களுக்கு,
தேவையெல்லாம் உங்களிடமிருந்து வரும்
கனிவான மொழிகள் மட்டுமே.
நீ
விட்டு கொடுப்பதாகவும் இல்லை;
உன்னை
விட்டு விடுவதாக
நானும் இல்லை!
Posted by
Murthy
at
2:53 AM
0
comments
January 11, 2016
முகம் தெரியாமலே!
உன் எண்ணமும், என் எண்ணமும்
ஒன்றாய் போனதால் என்னவோ
உன்னை நான் நேசிக்கிறேன்
முகம் தெரியாமலே!
என் உணர்வுகளை புரிந்தும்
என்னை தவிக்க வைப்பதேன்!
என் மன உணர்வுகளை
இந்த கவிதையும்
உனக்கு பிரதிபலிக்கும்!
Posted by
Murthy
at
2:45 AM
0
comments
Subscribe to:
Posts (Atom)