July 16, 2007

ஹைக்கூ!

இரவலாக பெற்றாலும்
இரவுக்கு துணையாய்
வெண்ணிலா!

ஹைக்கூ!

விபத்துகள் குறைந்தப்பாடில்லை;
ஆனாலும் எட்டு போடச்சொல்லும்
லைசென்ஸ் அதிகாரி!

ஹைக்கூ!

உறங்கிய பின்னும்
உறங்குவதில்லை.
என் உணர்வுகள்!

எங்களை புதைக்காதீர்கள்!

எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
சேர்த்து எரித்து விடுங்கள்!

நாடோடி வாழ்க்கை!

நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்.
வாழ்வை உணராத வரையில்!

ஹைக்கூ - முரண்

"படைத்தவனே பகையாளி"
ரிக்ஷாவில் கண்ட வாசகம்.
அதற்கு மேல் வரியில்
"கோட்டூர் குருசாமியே துணை".


சிந்தனை செய் மனமே!

ஆசிரமவாதிகளுக்கு
குறைவில்லை; ஏமாந்த
இந்திய மக்கள்
இருக்கும் வரை!

என் உணர்வுகள் ஊமையில்லை!

மொழி தெரிந்தும்
மொழிப்பெயர்க்க முடியவில்லை
என் உணர்வுகளை!

உன்னை மட்டும்
நெஞ்சில் சுமக்கின்றேன்
ஒரு சுமைதாங்கிப் போல!

அன்பு வைத்ததென்னவோ
அறவழியில் தான்.
இருந்தும் தெரியவில்லை − அது
அறவழி வன்முறை என்று!

என்
உணர்வுகளின் உச்சரிப்பு
நீ உணரும் வரையில்
உணரப்படாதது!

என்
உணர்வுகள் ஊமையில்லை.
ஊமையானது
என் உள்ளம் தான்!

காதல் மனம்

காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாழாய்போனது
என் காதல் மனம்!