என் உணர்வுகள் ஊமையில்லை!
மொழி தெரிந்தும்
மொழிப்பெயர்க்க முடியவில்லை
என் உணர்வுகளை!
உன்னை மட்டும்
நெஞ்சில் சுமக்கின்றேன்
ஒரு சுமைதாங்கிப் போல!
அன்பு வைத்ததென்னவோ
அறவழியில் தான்.
இருந்தும் தெரியவில்லை − அது
அறவழி வன்முறை என்று!
என்
உணர்வுகளின் உச்சரிப்பு
நீ உணரும் வரையில்
உணரப்படாதது!
என்
உணர்வுகள் ஊமையில்லை.
ஊமையானது
என் உள்ளம் தான்!
2 comments:
கவிதைகள் அனைத்தும் அருமை. இன்னும் முயற்சித்தால் கஜல் மாதிரி எழுத வரும். கலீல் ஜிப்ரானின் கவிதைகள் உணர்வுகளில் வார்த்தைகளை கொட்டி விளையாடும். அவர் போல வர வாழ்த்துக்கள்.
தங்கவேல் அவர்களுக்கு வணக்கம்,
தங்களது பின்னூட்டம் கண்டேன். தஙகளது வரிகள் அனைத்தும் எனக்கு அதிகாலை துயிலெழுந்து போன்ற உற்சாகத்தை என்னுள் விதைத்தது. தங்களது வரிகளை என்னுள் கொண்டு மேலும் முயற்சிப்பேன். மிக்க நன்றி!
Post a Comment