April 20, 2007

பெருமைக்காக அல்ல!




வீதியில்...
மயில்வாகனத்தில்
மாப்பிள்ளை கோலத்தில்
ஊர்வலமாய் நான்!
பெருமைக்காக அல்ல.
மயில்வாகனத்தை நம்பி,
வாழ்க்கை நடத்தும்
மயில் வாகனனுக்காக!

April 13, 2007

நினைவலைகள் ஓய்வதில்லை!

அழியாத
நினைவுகள்
என்றுமே அழிவதில்லை!

விழியால்
கண்ட காட்சிகள்
என்றுமே நிலைப்பதில்லை!

கழியாத
நாட்களென
என்றுமே ஒன்றுமில்லை!

ஆழியால்
பெற்ற முத்துக்கள்
என்றுமே தரம் குறைவதில்லை!

மழையால்
பெற்ற வளங்கள் அனைத்தும்
புவிக்கு சொந்தமில்லை!

சோழியால்
சொன்ன வார்த்தைகள்
எல்லாம் பழித்ததில்லை!

நாழிகையால்
கண்ட உண்மைகள்
அனைத்தும் விளங்குவதில்லை!

நட்பின்பால்
பெற்ற அன்பு
என்றுமே தேய்வதில்லை!

நினைவலைகள்
என் மனக்கடலில்
என்றுமே ஓய்வதில்லை!




விடியலை நோக்கி...

இதுவும்
இயற்கையின் ஒரு
சுயநலக் கொடுமைதான்.


ஒரு
ஆண்மகனை,
தன் கணவனை
ஒரு
கண்ணியத் தாய் சுமக்கிறாள்.
ஏதுமறியாத
அரைசித்தத்தில் - அந்த
ஆண்மகன்!


விளங்காத இந்த உலகம்
ஒரு வகையில்
அவனை
விலங்கிட முடியாமல்
தவிக்கிறது.


பிறர்
வெறுப்பிலும் - சிரிப்பு!
தன் மனைவியின்
வெம்மையிலும் - சிரிப்பு!
அது ஒன்றே
இறைவன் அவனுக்கு
கொடுத்த வரம்.


இலக்கு இல்லாத
அவன் வாழ்வில்
விடியலைத் தேடியே
அவன் மனைவி!


விடியும்பொழுது ஒவ்வொன்றும்
தன் வாழ்வில் விடியாதபோது
பொறுப்புகளுடன் சேர்த்து
தன் கனவனையும்
சுமந்து கொண்டு
பயணமாகிறாள்,
விடியலை நோக்கி! - அந்த
பூக்காரத் தாய்!







உறங்காத விழிகள்

மழைக்கும் கூட மனமில்லை!

ஆழ்ந்து உறங்கிய சிறுவனையும்

விட்டுவைக்கவில்லை.

தட்டி எழுப்பி, ஓரிடத்தில்

உருட்டினாள் தாய்.

உறக்கம் கலைந்த நிலையில்

சோர்ந்த இரண்டு விழிகளும்

விழித்துக் கொண்டிருந்த வானத்தையே

பார்த்திருந்தன விடியும்வரை!

விழித்திருந்தது அவனது விழிகள் மட்டுமல்ல,

இரவில் உறக்கத்தை மறந்த

அத்தனை நடைப்பாதை மக்களும்தான்!




உனக்காக ஒரு கவிதை!

பெண்ணே!
உன்னைக் காண
துடிப்பது
கண்கள் மட்டுமல்ல.
என் இதயமும்தான்!


என்
இதயமும்
கற்பனையின் பிரதிபலிப்புதான்
உன்னைக்
கானும் வரையில்!


உன்
கடைக்கண் பார்வைக்காக
காத்திருப்பேன்
என்றும்
உன் நினைவோடு!


நான் இன்னும் பார்க்காத அவளின் நினைவாக



ஹைக்கூ - நடைவண்டி

நடைவண்டி

தேவைதான் நம்நாட்டு

ஹை-ஹீல்ஸ் கன்னிகளுக்கு!


ஹைக்கூ - ஞானம்

புத்தனுக்கு

போதி மரத்தில் - ஞானம்!

பித்தனுக்கு

காவி நிறத்தில் - ஞானம்!