June 12, 2007
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!
இறைவன் கொடுத்த அமுதே!
எங்கள் வழ்வின் ஆதாரமே!
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!
ஆனால்
இன்று வறண்டு போன
என் மக்களின் கண்களிலோ
கண்ணீர்! கண்ணீர்! கண்ணீர்!
எங்கள் வாழ்வும்
வளமற்று காணப்படுகிறது.
வறண்டு போன - இந்த
பூமியைப் போல!
விவரமறியாத வயதிலும்
விதைத்துக்கொண்டோம்
எங்கள் மனதில் - இனி
எங்கள் மக்களின் தேவை
தண்ணீரேயன்றி, கண்ணீரல்ல என்று!
Posted by
Murthy
at
3:39 AM
0
comments
உன் வரவோலைக்காக!
உடையிடையில் தெரியவில்லையடி
உந்தன் மடியிடை - என்
கடைவிழி பார்வைக்கு!
உன்னதமான உன் மென்மை
என்னை மலைக்க செய்தது!
மென்மையான உன் உள்ளம்
வன்மையாக தண்டித்தது என்னை!
கூர்மையான உனது பார்வையில்
வலிமையிழந்து போனேன் நான்!
கதிரவனின் வருகையால்
காரிருள் மறைந்தது போல - உன்
முகவொளி கண்டு - என்
பேரிருள் அகன்றது!
வெண்மையான
உன் உள்ளத்தில் இடம்பெற - நான்
என்ன தவம் செய்ய...
இலக்கியமே உருவான - என்
இலக்கியா!
உன்
இதயத்தில் இடம் தருவாயோ
இந்த நாடோடிக்கு!
கடலலை என்னைக்
கடந்து சென்றாலும்
அழியாத என் அன்பு
உன் ஒருத்திக்குதான்!
உடைவாளை
என் இதயத்தில் தாங்கி
உன் வரவோலைக்காக
காத்து நிற்கிறேன்!
Posted by
Murthy
at
3:38 AM
1 comments
வீரத்தாய்!
வீரத்தாய்
பெற்றெடித்த மூன்று
ஆண் சிங்கங்கள்!
தாரம் மறந்து
நேரம் வர
நின்றனர்!
தேசம் காக்க
பாசம் துறந்து
போருக்கு சென்றனர்!
அங்கே
போரிலே
'மூத்தமகன் வீரமரணம்'
ஈன்ற பொழுதைக்
காட்டிலும் பெரிதுவக்கும் - அந்த
வீரத்தாய்!
அங்கே
போரிலே
'இரண்டாமவன் வீரமரனம்'
பாரிலே உண்டோ
எங்கள் குல வீரம்.
நெஞ்சுயர்த்தி நின்றாள் - அந்த
வீரத்தாய்!
அங்கே
போரிலே
'மூன்றாமவன் வீரமரணம்'
கண்ணிலே கண்ணீர்
நெஞ்சிலே உதிரம்
கொட்ட உருகினாள்.
நாட்டைக் காக்க
வேட்டைக்கு அனுப்ப
இன்னொரு மகன் இல்லையே
என்று நினைக்கும்போது!
Posted by
Murthy
at
3:37 AM
1 comments
காதல் துறவி!
நான்
மனிதனானேன் - அவள்
என்னைக் காதலிக்கும்போது!
நான்
கவிஞனானேன் - அவள்
என்னைப் பிரியும்போது!
நான்
துறவியானேன் - அவள்
இன்னொருவனின் கைபிடிக்கும்போது!
Posted by
Murthy
at
3:35 AM
1 comments
இதோ எந்தன் தேவதை!
அமைதியான சூழல் - அதிலும்
பனி மழைச் சாரல்!
கூந்தல் விரித்த மாதுவோ! - இவள்
தோகை விரித்த மயிலோ!
ஒய்யார நடையோ - இவள்
நடையில் அன்னத்தின் வடிவோ!
மழையை விரும்பும் மனமோ! - இவள்
மங்கையரில் சிறப்பு யினமோ!
செதுக்கிய சிலையோ! - இவள்
செந்நாப் புலவரின் மகளோ!
மாசற்ற மணியோ! - இவள்
மங்காத வாழ்வின் ஒளியோ!
நங்கையரில் சிறந்த உன்னை
சிறையெடுக்க - இதோ
எந்தன் காதல் கவிதை!
Posted by
Murthy
at
3:27 AM
4
comments