June 12, 2007

இதோ எந்தன் தேவதை!

அமைதியான சூழல் - அதிலும்
பனி மழைச் சாரல்!
கூந்தல் விரித்த மாதுவோ! - இவள்
தோகை விரித்த மயிலோ!
ஒய்யார நடையோ - இவள்
நடையில் அன்னத்தின் வடிவோ!
மழையை விரும்பும் மனமோ! - இவள்
மங்கையரில் சிறப்பு யினமோ!
செதுக்கிய சிலையோ! - இவள்
செந்நாப் புலவரின் மகளோ!
மாசற்ற மணியோ! - இவள்
மங்காத வாழ்வின் ஒளியோ!
நங்கையரில் சிறந்த உன்னை
சிறையெடுக்க - இதோ
எந்தன் காதல் கவிதை!

3 comments:

Anonymous said...

அருமை. எளிய நடை. இன்னும் எழுதுங்கள் உங்கள் தேவதையைப் பற்றி... ஓஓஒ யாரு அந்த தேவதை!!!!!!!!!!!!!! :-)

Karuvai said...

ரொம்ப நன்றி! உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது நான் எழுத உற்சாகமளிக்கிறது.

Anonymous said...

hai anna who is that angel.please tell me anna.
very nice kavithai